2021 மார்ச் 01, திங்கட்கிழமை

எட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஏ.எஸ்.எம்.யாசீம்

அமெரிக்கத் தூதரகத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள எட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகியது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேய குணவர்த்தனவும் கடற்படையின் சார்பில் லெப்டினன்ட் டேவ் கிறிஸ்ரினும் இந்த ஒப்பந்தத்தில்; கைச்சாத்திட்டனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களது கற்றல் சூழலை அபிவிருத்தி செய்யும் முகமாக இந்த பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.  இதற்றாக முதற்கட்டமாக  பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு அவைகள் 3.2 மில்லியன் அமெரிக்க  டொலர் நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .