Thipaan / 2016 ஜூலை 18 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து, 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த இளைஞனனொருவனை, நேற்று இரவு (17) கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல், குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதான இந்த இளைஞன், கந்தளாய் பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்துவந்துள்ளார்.
இவர் வேலை முடிந்து, கந்தளாய் குளத்துப் பகுதியில் வைத்து கஞ்சா புகைப்பதற்கு தயாரான போது, பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்இளைஞன், கைது செய்யப்பட்டதாக கந்தாளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்ததனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
26 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
27 minute ago