2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கடல், வாவி நீர் பெருக்கெடுத்தமையால் மக்கள் அச்சம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட், ஏ.எச்.ஏ.ஹுஸைன், நித்தி ஆனந்தன்,

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில கரையோரப் பகுதிகளில்;; ஞாயிற்றுக்கிழமை (11) இரவு கடல் நீர் உட்புகுந்தமையால், மக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர்.   

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஹபீப் நகர், வட்டம், ஹைறியா நகர் ஆகிய பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்தமையால், மேற்படி பகுதிகளிலுள்ள மக்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்று(12) அவர்கள் தங்களின் குடியிருப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு, களுவன்கேணிப் பகுதியில் கடல்  கொந்தளித்து, கடல் நீர் கரைக்கு வந்தமையால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

இக்கடல் கொந்தளிப்பால்; கரையில் நிறுத்திவைக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றின் எஞ்சின் பழுந்தடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஏறாவூர் வாவி நீர்  கிராமங்களுக்குள் உட்புகுந்ததால், வாவிக் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டனர்.  

ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, பங்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான், வவுணதீவு ஆகிய கிராமங்களின் கரையோரங்களில் வாவி நீர் உட்புகுந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வங்காளக் கடலோடு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் இணைந்ததாக ஏறாவூர்  வாவி காணப்படுகின்றது.
கடலில் ஏற்பட்ட தளம்பலே நீர் பெருக்கெடுத்தமைக்குக் காரணம் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .