2021 மே 06, வியாழக்கிழமை

'கட்சி தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்கும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,ஏ.எஸ்.எஸ்.யாசீம்

தேசியப்பட்டியல் விவகாரத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்குவது தொடர்பில் சாதகமான பல கருத்துக்களை பல்வேறு கூட்டங்களில் கூறி வந்துள்ளேன். ஆகவே, திருகோணமலை மாவட்டத்துக்கான தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் பொருத்தமான தருணத்தில் கட்சி தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  நடைபெற்ற கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனும் போராளிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தலைமைத்துவம் மூடி மறைத்து செல்கின்றதென நீங்கள் ஆதங்கப்படத்தேவையில்லை. பக்குவமாக இவ்விடயத்தை கையாள வேண்டிய நிலை தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ளது.

சரியான விடயத்தை சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.சரியான விடயத்தை பிழையான நேரத்தில் சரியென நினைத்து செய்வது பிழையாகி விடும். ஆகவே, திருகோணமலை மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் ஏலவே ஒரு தடவை வழங்கப்பட்டுள்ளது.

மூதூரில் தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட வேளை ஒருவர் மாவட்டத்தில் இருக்கத்தக்க கிண்ணியாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் இம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற இவ்வேளையில், திருகோணமலை மாவட்டத்துக் தேசியப்பட்டியல் வழங்காமல் இருக்க முடியுமா?

எனவே, தேசியப்பட்டியல் காலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரைவாசி காலப்பகுதியோடு முதல் யாருக்கு வழங்குவதென்று தலைமைத்துவமே முடிவு செய்யும் என்றார்.

மேலும்,கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சினை யாருக்கு வழங்குவதென்ற தீர்க்கமான தீர்மானத்தையோ முடிவுகளையோ கட்சித் தலைமை எட்டவில்லை.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சு தங்களுக்கு வழங்கப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லா மாகாண சபை உறுப்பினர்களிடையேயும் இருக்கின்றது.குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை தொகுதியிலும் அவ் எதிர்பார்ப்பு உண்டு.

பொருத்தமான தருணத்தில் தலைமை இது தொடர்பான நியமனத்தை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .