2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கண்டல்காட்டுக் கிராமத்தில் மின்சாரவேலி அமைக்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, கண்டல்காட்டுக் கிராமத்தில் மக்களின் சொந்தத் காணிகளுக்கு ஊடாக  மின்சார வேலி அமைக்கும் பணி இன்று (25) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி கிராமத்தில் யானைகளின் நடமாட்;டத்தைத் தவிர்க்கும் வகையில் வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 23ஆம் திகதி மின்சார வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த மின்சார வேலியானது தமது காணிகளுக்கு ஊடாக  அமைக்கப்படுவதாகவும் இதை உடனடியாகத் தடுத்துநிறுத்தி தமது காணிகளை அடையாளம் காண உதவுமாறும் மத்திய சுகாதாரப் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸிடம் காணி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  

இந்நிலையில், வனவளத் திணைக்கள  அதிகாரிகளை குறித்த இடத்துக்கு சனிக்கிழமை (24) அழைத்துச் சென்றதுடன், அக்காணிகள் பிரதேச செயலகத்தால் அடையாளம் காணப்பட்டு   உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்வரை மின்சார வேலி அமைப்பதை நிறுத்துமாறு குறித்த அதிகாரிகளிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் இதனை அடுத்து, மின்சார வேலி அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரப் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸ் தெரிவித்தார்.

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்றம் யுத்தம் காரணமாக கண்டல் காட்டுக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், கிண்;ணியாவின் ஏனைய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மக்கள் மீள்குடியேறாமையால், இக்கிராமத்தில் மக்கள் தங்களின் காணிகளை அடையாளம் காண முடியாத வகையில் காணப்படுகின்றது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .