2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கந்தளாயில் அடை மழை

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                         

திருகோணமலை,கந்தளாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த அடை மழை காரணமாக வான்எல,ஜயந்திபுர,சூரியபுர,வட்டுக்கச்சி,மற்றும் பேராறு ஆகிய பிரதேசங்களில் வெள்ள நீர் வழிந்து காணப்படுகிறது.

இப்பிரதேசங்களில் உள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் நீர் நிறைந்து காணப்படும் அதேவேளை, வீதிகளிலும் நீர் வழிந்து காணப்படுகிறது.

இதனால்,பொதுமக்கள் போக்குவரத்துகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, அடைமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .