2021 மே 06, வியாழக்கிழமை

கந்தளாய் விடுதிகள், ஹோட்டல்களில் திடீர் சோதனை

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கந்தளாய் பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் இளம் காதல் ஜோடிகள் ஹோட்டல்களுக்கும் விடுதிகளுக்கம் வருகை தந்து தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தொடர்ந்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டையடுத்தே இத் திடீர் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.

அண்மையில், இப்பிரதேசங்களில் தங்கும் விடுதிகளில் பொலிஸாரால் பல பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் எச்சரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .