Sudharshini / 2016 ஜூலை 27 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி காட்டு மரங்களை வெட்டிய கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரை, ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க நேற்று செவ்வாய்கிழமை (26) உத்தரவிட்டார்.
சூரியபுர காட்டுப் பகுதிக்குள் பச்சை மரங்கள் வெட்டப்படுவதாக திங்கட்கிழமை (25) பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே, சந்தேகநபரை கைது செய்ததாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சந்தேக நபரிடமிருந்து கோடரி மற்றும் கையிறுகளையும் பொலிஸார் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
மேற்படி சந்தேகநபரை, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago