Thipaan / 2016 ஜூலை 17 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான காணிச் சட்டங்கள் தொடர்பான முழுநாள் செயலமர்வு, மூதூர் பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில், நேற்று (16) நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வினை சட்டம் மற்றும் சமூக நிதியம் ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் பிரதேசத்தில் அதிகமாக காணி தொடர்பான தெளிவில்லாமல் மக்கள் இருப்பதோடு, அனேகமான காணிப் பிரச்சினைகளும் உள்ளதால், கிராம மட்ட சிவில் அமைப்புக்களை தெளிவூட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் வளவாளராக உதவி காணி ஆணையாளர் ஆர். ரவிராஜன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


13 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
27 minute ago