2021 மே 12, புதன்கிழமை

கிண்ணியாவில் எண்மருக்கு குரு பிரதீபா பிரபா விருது

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
2015ஆம் ஆண்டுக்கன குரு பிரதீபா பிரபா விருதுக்காக கிண்ணியா கல்வி வலயத்தில் இருந்து ஐந்து ஆசிரியர்களும் மூன்று அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்வாரி,கிண்ணியா ஆண்கள் வித்தியாலய அதிபர் எஸ்.முகமட், கிண்ணியா அல் இர்பான் வித்தியாலய அதிபர்  எம்.எஸ்.நசூர்தீன்,கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர்களான எம்.ரீ.எஸ் நிஹாரா நௌஸாத், எம்.ரீ.ஜெனீரா தௌபீக்,கிண்ணயா ஆண்கள் வித்தியாலய ஆசிரியர் எம்.ஏ.ரு முகம்மது அமான்,கிண்ணியா அல் மின்ஹாஜ் வித்தியாலய ஆசிரியர் ஏ.எம்.மஜீத். கிண்ணியா வான் எல வித்தியாலய ஆசிரியர் பி.ரீ.றிஸ்வாத் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

செவ்வாய்க்கிழமை(06) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த  மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின் போதே இவர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .