2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

காதலியுடன் கதைத்துக்கொண்டிருந்த இளைஞனை தாக்கிய மூவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது காதலியுடன் கதைத்துக்கொண்டிருந்த இளைஞனைத் தாக்கிக் காயமேற்படுத்திய மூவரை, நேற்று வெள்ளிக்கிழமை (09) மாலை, கைதுசெய்துள்ளதாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பகுதியைச் சேர்ந்த 22, 21 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காயங்களுக்குள்ளான இளைஞன், சேருநுவர கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

காயங்களுக்குள்ளான இளைஞன் மீது இருந்த தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .