Thipaan / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப். முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
திருட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பில், திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதியொருவர், நேற்று திங்கட்கிழமை (12) இரவு, சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரன் (30 வயது) என்பவரே, சிறைச்சாலை அறைக்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .