2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 ஜூலை 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, பம்புறுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், குளவி கொட்டுக்கு இலக்காகி, கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று (18) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.சோமரத்ன (39 வயது) அவரது மனைவியான எம்.சுனீதா மாலனி (36 வயது) மற்றும் ரணசிங்ககே சியானி (25 வயது) ஏ.சந்ராகுமாரி (26) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பூப்புனித நீராட்டு விழாவுக்காக விறகு எடுக்கச்சென்ற போது, மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்தமையினாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .