2021 ஜனவரி 20, புதன்கிழமை

கிளிவெட்டி படுகொலை: மேலும் 10பேர் சாட்சியம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், பொன்ஆனந்தம்

திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில், நேற்று வியாழக்கிழமையன்று, மேலும் பத்து பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்படுகொலையின் போது, சுமார் 26பேர் வரை கொல்லப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாராணைகள், அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நேற்றைய தினம், நீதிமன்றில் முன்னிலையான, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்கள் என பத்து பேர், படுகொலை தொடர்பில் சாட்சியமளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்குமாறு, மேலும் 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகளில் தற்போது வரை 32பேர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .