Niroshini / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 11:42 - 1 - {{hitsCtrl.values.hits}}

-எ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியை இன்று வியாழக்கிழமை காலை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம்.அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் போல் கலந்து கொண்டார்.
தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் நீண்ட நாட்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருவது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு, பதிலளித்த அமைச்சர்,
தாங்கள் இது சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பல முறை கலந்துரையாடியுள்ளதாகவும் நியமனம் வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால், இதில் பல பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன என்றார்.
மேலும்,கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தெரிவித்து இதற்காக தொண்டர் ஆசிரியர்களின் விபரங்களை ஆராய்வதற்கு ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இறுதி அறிக்கையின் பிரகாரம் மத்திய அரசுடன் பேசி தீர்வு கண்டு நியமனம் வெகு விரைவில் வழங்க ஆவண செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
40 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
S.Dilakshana Friday, 15 March 2019 03:04 PM
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் விபரம் அனுப்பவும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025