2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

குழப்பம் விளைவித்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

கடந்த வருடம் திருகோணமலையில் சாராயம் குடித்து விட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு 3,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையினை செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்தும்  திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா வியாழக்கிழமை (19)உத்தரவிட்டார்.                                 

திருகோணமலை, கண்டிவீதி, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.                       

குறித்த நபர் திருகோணமலை பிரதேசத்தில் கடந்த வருடம் சாராயம் குடித்து விட்டு வீதியால் சென்ற பொதுமக்களுக்கு குழப்பம் விளைவித்ததோடு, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போதே திருகோணமலை பொலிஸார் அவரை  கைது செய்தனர்.

குறித்த நபருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இணங்கண்டே  திருகோணமலை நீதிமன்ற நீதவான்  3,500 ரூபாய் தண்டப்பணத்தினை செலுத்துமாறும் அதனை செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .