Kogilavani / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், தீஷான் அஹமட்
எமது பிரதேச மக்கள், நோயாளர்களைக் கூட்டிக்கொண்டு கண்டிக்கும் கொழும்புக்கும் அலையும் துயர்நிலையைப் போக்க, கிழக்கிலே சகல வசதிகளுடனான வைத்தியசாலையொன்றை அமைக்க, நடவடிக்கையெடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வரவு-செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சு மீதான விவாதம், நேற்று (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
'கிழக்கில் சில வைத்தியசாலைகளில் வைத்தியர் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றன. அத்துடன், வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறையும் காணப்படுகின்றன. குறைபாடுகள் காணப்படும் வைத்தியசாலைகளை அடையாங்கண்டுள்ளதுடன் அவற்றின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்' என்றார்.
'சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதிகாரப்பகிர்வு தொடர்பில் சாதகமான கருத்துக்களை தெரிவிப்பார் என்ற வகையில், கிழக்கு மாகாணத்தில் சுகாதார வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எமது ஆட்சிக்காலப்பகுதிக்குள், கிழக்கின் சுகாதாரத்துறையை சகல அங்கங்களிலும் வளம் பெறச்செய்வதே, எமது நோக்கமாகும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025