2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து, நாடளாவியரீதியில் இருந்து சுமார் 360 பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன், சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டம், திருகோணமலையிலுள்ள இலங்கைக் கடற்படை கிழக்கு பிராந்தியத்தில், நாளை மறுதினம் (20) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தச் சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டங்கள், தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு இடம்பெறவுள்ளன.

ஆரம்ப நிகழ்வை, சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும, வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பார். இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--