அப்துல்சலாம் யாசீம் / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் அட்டகாசம் செய்த சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை, நேற்று (01) இரவு கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தான, கோமரங்கடவல பகுதிகளைச் சேர்ந்த 23, 28 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவித்தல் வழங்கியதாகவும் சந்தேகநபர்களை, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago