2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சிறுநீரக நோயால் 584 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 02 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் சிறுநீரக நோயால் 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அனுசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.

இவர்களில் 51 பேருக்கு சிறுநீரக நோய்க்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர, கோமரங்கடவெல, வான்எல பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சிறுநீரக நோயால்; பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், பதவிசிறிபுர வைத்தியசாலையில் 371 பேர் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 183 ஆண்களும் 188 பெண்களும் உள்ளனர். கோமரங்கடவெல பிரதேசத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 137 பேர்  உள்ளனர்.வான்எல பிரதேசத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 76 பேர் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--