2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2017 மே 27 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

டைனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டுபண்ணும் சாதனங்களை நிறுத்துவதற்கு உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கொரி, அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தினால்,  திருகோணமலை நகர மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகாமையில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் மீன்பிடித் தொழிலில் தடை செய்யப்பட்ட டைனமைட் எனப்படும் வெடிபொருளைப்  பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஒரு சிலர் ஈடுபடுவதனால், பரவலாக அன்றாடம் மீன்பிடிக் கைத்தொழிலினை தமது பிரதான வருமானமாகச் செய்யும் பெரும்பான்மையானவர்கள் பல்வேறு சிக்கலிற்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

 

மீன் வளங்களை நாசமாக்கி, மீன்பிடித் தொழிலை நிரந்தரமாகப் பாதிக்கும் டைனமைட் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை நிறுத்தி மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாக்கக வேண்டியது, பொறுப்புக் கூற வேண்டியவர்களின் கடமையாகும்.

இந்த அழிவை உண்டு பண்ணும் சாதனங்கள் தொடர்பாக மீனவர்களுக்கு அறிவூட்டி, அவர்களைப் பாதுகாக்கும் சாதனங்களை அறிமுகப்படுத்தி,  மீன்பிடிக் கைத்தொழிலைப் பாதுகாக்கும் கடமையினைத் தொடர்ந்தும் பொறுப்பதிகாரிகள் கைவிட்டு வரும் அதே வேளையில், டைனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டுபண்ணும் சாதனங்களை நிறுத்துவதற்கு உடனடியாகத் தலையிட வேண்டும் என, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .