Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு திடீர் சுற்றிவளைப்புகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு வருவதாக, திருகோணமலை பிராந்திய தொற்றுநோயியலாளர் பிரிவின் பொறுப்பதிகாரி தங்கவேல் நிலோஜன் தெரிவித்தார்.
தற்போது திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவதால், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மட்டங்களில், குழுக்கள் பிரிக்கப்பட்டு பிரதேச சபைகளின் ஊடாக அனைத்து வீடுகளும் அரச திணைக்களங்களும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு பரவுவதை தடுப்பதற்காக பாரிய முன்னெடுப்புகள் மேற்கொண்ட போதிலும், பொதுமக்கள் கவனமற்ற முறையில் செயற்பட்டு வருவதாகவும் டெங்கு பரவும் விதத்தில் வீடுகளையும் சுற்றுப்புற சூழலையும் வைத்திருந்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 23 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி மாவட்டத்தில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக திருகோணமலை நகரம், உப்புவெளி, மூதூர், கிண்ணியா குறுஞ்சான்கேணி போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவிலான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்களை மிகவும் கரிசனையுடன் செயற்படுமாறும், டெங்கு பரவாமல் இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
56 minute ago
1 hours ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
23 Oct 2025