Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, அலஸ்தோட்டத்தில் 400 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்குரிய சுற்றுலா விடுதி மற்றும் சுற்றுலா தகவல் மையம் என்பன இம்மாதம் 31 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வுகளில் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லன்சா-,அரச நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளார்கள்.
திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையிலான குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Jul 2025
14 Jul 2025