Thipaan / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடியிலிருந்து சம்பூர் வரையிலான 4.5 கிலோமீற்றர் நீளமான வீதியை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இன்று செவ்வாய்க்கிழமை (13) திறந்துவைத்தார்.
சிறைச்சாலைகள், புனர்வாழ்வு, மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் 53.7 மில்லியன் ரூபாய் நிதியொதிக்கீட்டின் கீழ், இலங்கைக் கடற்படைத்தளத்தினால் இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டது.
மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி, துரைராஜசிங்கம் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கே. துரைரெட்னசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025