Suganthini Ratnam / 2016 மே 24 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, சந்திவெளி -இலுப்படிச்சேனைக்கு இடையிலான (சந்தனமடு ஆறு) படகுச் சேவையை சீர்செய்து இலவச சேவையை வழங்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த பிரேரணை மாகாண சபையால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, அவர் இந்தப் பிரேரணையை முன்வைத்தார்.
இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர், 'இந்தப் படகுப் போக்குவரத்துச் சேவை சீர்செய்யப்படாமையால், பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் சந்தனமடு ஆற்றின் ஊடான இப்படகுச் சேவை சீர்செய்யப்படாமையால், வெள்ளப்பெருக்குக் காலத்தில்; உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆகவே, மேற்ப படகுச் சேவையை சீர்செய்ய வேண்டும்' என்றார்.
இப்பிரேரணை சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குறித்த படகுச் சேவையை சீர்செய்து வழங்குதாகவும் அடுத்த ஆண்டு முதல் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக இலவச சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
6 hours ago
02 Dec 2025
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
02 Dec 2025
02 Dec 2025