2020 நவம்பர் 25, புதன்கிழமை

பட்டணத்தெரு முதல்; சல்லிவரையான கிராமங்கள் கடலரிப்பால் பாதிக்கப்படும் அபாயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பட்டணத்தெரு முதல்; சல்லிவரையான கரையோரக் கிராமங்கள் கடலரிப்பால் பாதிக்கப்படும்  அபாயம் ஏற்பட்டுள்ளது என அபிவிருத்திச் சங்கங்கள், நேற்று (26) தெரிவித்தன.

பட்டணத்தெரு, திருக்கடலூர், ஜமாலியா, முரகாபுரி, அலஸ்தோட்டம், சல்லி ஆகிய கிராமங்களுக்கே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வாழ்விடங்களும் மீன்பிடி இடங்களும் கடலரிப்புக் காரணமாகப் படிப்படியாகக் காவு கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் திருக்கடலூர் கிராம அபிவிருத்திச் சங்க அதிகாரிகள் தெரிவித்தபோது, இக்கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ.வின் தலைவருமான இரா.சம்பந்தன், மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

எனவே, விரைவாக கரையோரப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து  கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்' என்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .