2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது  தொடர்பான பிரேரணையொன்று, கிழக்கு மாகாண சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய நேற்று கூடிய கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு,  சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது,

இதனடிப்படையில், வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கிழக்கு மாகாண சபையால் நிவாரணம் வழங்குவது தொடர்பான பிரேரணையை கொண்டு வந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உரையாற்றியபோது,

எமது நாட்டை அண்மையில் உலுக்கிய வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் என்பன நாட்டின் அண்மித்த வரலாற்றில் ஏற்பட்ட பாரியதொரு பேரழிவாகவே கருத முடியும்,

இதன்போது ஏற்பட்ட உயிரிழப்புகளும் சேதங்களும் எமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமுள்ள மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளும் கர்ப்பிணத் தாய்மார்களும் பள்ளி சென்ற சிறார்களும் முதியோர்கள் என பாரபட்டசமின்றி நூறுக்கணக்கான உயிர்கள் இந்த அனர்த்தத்தின் போது காவு கொள்ளப்பட்டன.

யாரும் நினைத்திராத சந்தரப்பத்தில் தென் மேல் பருவப் பெயர்ச்சி மழையினால் பல ஆறுகளின் நீர் மட்டம் அசாதாரணமாக அதிகரித்து கணப்பொழுதிகள் பல உயிர்களை காவு கொண்டது.

கிழக்கு மாகாண மக்கள் சுனாமி மற்றும்  வௌ்ளம் போன்ற அனர்த்தங்களால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த போது எமக்கு எமது நாட்டின் சக மக்கள் உதவிக்கரம் நீட்டியிருந்தார்கள்.

ஆகவே, கிழக்கு மக்களும் தேசிய அனர்த்த நிலைமைகளின் போது மனிதாபிமானத்தை மறந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து எமது மக்களுக்கு நாம் உதவ முன்வந்துள்ளோம்.

ஆகவே, கிழக்கு மாகாண சபை வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு  7.5 மில்லியன் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிகின்றேன்” என்றார்.

இதையடுத்து, கிழக்கு மாகாண சபையினால் இந்தப் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது

இதைத்தொடர்ந்து, குறித்த 7.5மில்லியன் ரூபாய் நிதியை விரைவில் பாதிக்கப்பட்டு மக்களுக்கு சென்றடைவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .