2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பஸ் மிதிபலகையிலிருந்து விழுந்து யுவதி படுகாயம்

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று சனிக்கிழமை (21) காலை பஸ் மிதிப்பலகையிலிருந்து விழுந்து 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, சம்பாலேன் பகுதியைச் சேர்ந்த எல்.லக்ஸானி என்ற யுவதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். 

மூதுரிலிருந்து திருகோணமலைக்குப் பயணிகளை ஏற்றி வந்த பஸ்ஸில் குறித்த யுவதி இறங்குவதற்கு முன்னரே பஸ்ஸை எடுத்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .