2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் பாவனையின் பாதிப்புகள் பற்றி மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தல்

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாயில் இலங்கை ஜஅமாதே இஸ்லாமியின் ஏற்பாட்டில் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தி/அல்-தாரீக் மகா வித்தியாலத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் பாவனையும் அதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் பற்றியும் தெளிவுபடுத்தும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.  

அப்பாடசாலையின் அதிபர் என்.எம்.நசூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர் ஹஸ்புள்ளா ஹில்மியினால் விளக்கங்களை வழங்கினார். 

இதில் தரம் 9 தொடக்கம் கல்விப் பொதுத்தராதரம் வரையான மாணவர்கள் கலந்துகொண்டு தெளிவினைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் இலங்கை ஜஅமாதே இஸ்லாமியின் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .