Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 28 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம், தீஷான் அஹமட், எஸ்.சசிக்குமார், அப்துல்சலாம் யாசீம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வீரமா நகர் நாகம்மாள் கோவிலுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டாளிபுரம், வீரமா நகர், நல்லூர், சீனன்வெளி, உப்பூரல், இலங்கைத்துறை முகத்துவாரம், நீனாக்கேணி, இலக்கந்தை, சந்தனவெட்டை, சந்தோசபுரம், சாலையூர், சீதனவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணிகள் அபகரிக்கப்படுகின்றமை மற்றும் தமது பகுதியில் காணப்படும்; அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துத் தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
சமுர்த்தி முத்திரை இன்மை, குடிநீர் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, வைத்தியசாலைக்கான வைத்தியர் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை ஆகியவற்றை தீர்க்குமாறும் அம்மக்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழங்;குடியின மக்கள்; அமைப்பின் தலைவர் க.கனகசிங்கம்; தெரிவிக்கையில்,'மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், அரசியல் செல்வாக்குடன் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பழங்குடியினராகிய எமது மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், யுத்தம் காரணமாக எமது பகுதியிலிருந்து மக்கள் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் இடம்பெயர்ந்தனர். அதன் பின்னர், இவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்து கொடுக்கப்படவில்லை என்பதுடன், மிக வறுமையில் வாழ்கின்ற எமது மக்களுக்கு சமுர்த்தியும் வழங்கப்படவில்லை.
எனவே, எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025