2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மனைவியை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                  

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்டுச்சேனை, மாவடிச்சேனைப் பகுதியில் மனைவியை அடித்து துன்புறுத்திய நபரை,அடுத்தவருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்;கமறியலில் வைக்குமாறு  மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.                        

மேற்படி நபர், தனது மனைவியை தாக்கி தலை மற்றும் கைப்பகுதியில் காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து, குறித்த பெண் சேருவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  சந்தேக நபரை வியாழக்கிழமை(19)மாலையில் கைதுசெய்துள்ளத பொலிஸார் நேற்று (20) குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில்  இருவர் கையொப்பம் இடும் வரை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்                               


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .