2021 மே 08, சனிக்கிழமை

மலேரியா தடை இயக்க ஊழியர்கள் போராட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்துக்கு கீழ் இயங்கி வரும் மலேரியா தடை இயக்க ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊழியர்களை மதிக்காமை,தான் எடுக்கும் முடிவை மாத்திரம் அமுல் படுத்த வேண்டும்,சுகாதார சிற்றூழியர்கள் நோயாளர்களை அம்பியுலன்ஸ் மூலம் கொண்டு செல்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு 175 ரூபாயினை வழங்க முடியாது என கூறி அக்கொடுப்பனவை இடை நிறுத்தியமை போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார சிற்றூழியர்கள் கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார திணைக்களத்துக்கு முன்னால் எதிர்வரும் காலங்களில் எதிர்ப்பு ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் சிற்றூழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X