Princiya Dixci / 2016 மே 20 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக்
ஹஜ் யாத்திரை தொடர்பிலான பயணப் பணியினை மேற்கொள்ளும் முகவர்களை அறிவிக்கும் வரையில் எந்த பயணிகளும் ஹஜ் முகவர் நிலையங்களுக்கும் பணம் செலுத்த வேண்டாம் என முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
முகவர்களின் பெயர், விவரங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொள்வது சிறந்தது எனவும். கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டடுள்ளது. அதனை தவிர்க்கும் முகமாகவே இவ்வாறான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ் உத்தியோகபூர்வ அறிவித்தலின் பின்னர் முற்பதிவுகள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் திணைக்களம் பொறுப்பாகாது எனத் தெரிவித்துள்ளது.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025