Suganthini Ratnam / 2016 ஜூலை 22 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு இம்மாதத்திலிருந்து வழங்கப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார். இதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.
இப்பிரேரணையை சமர்ப்பித்து மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில், 'எமது நாட்டிலுள்ள மாகாணசபைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், தவிசாளர், அமைச்சர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு மட்டும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு இதுவரையும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கான அனுமதி கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டதாகவும்; மிக விரைவில் மாகாணசபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முதலமைச்சர் உறுதியளித்திருந்தார். இருப்பினும், இதுவரையில் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை' எனத் தெரிவித்தார்.
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago