2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மூதூரில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

சம்பூரில் இரண்டாம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள்,தமக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரி,மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இவ் ஆர்ப்பாட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகத்தில் நுழைவாயிலில் அமர்ந்து கொண்டு தமக்கு  தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரினர்.

இதனால் சிறிது நேரம் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

அவ்விடத்துக்க விஜயம் செய்த பிரதேச செயலாளர் வி. யூசுப், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரைப் பெற்றுக் கொண்டு, அதற்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாகக் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .