2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மீன்வாடி தீக்கிரை

Thipaan   / 2016 ஜூலை 17 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் கடப்பரப்பிலுள்ள மீன்வாடி, இன்று (17) அதிகாலை 3.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைத்தோட்டம், மாவடிச்சேனையை வசிப்பிடமாக கொண்ட கனகசூரியம் ஜெயராசா என்பவருக்குக்குச் சொந்தமான மீன்வாடியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த வாடியின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்ததுடன், தகரத்தால் அடைக்கப்பட்டிருந்துள்ளது. அதற்குள் 150 மீற்றர் நீளமுடைய 05 தோரா வலைகளும் 75 மீற்றர் நீளமுடைய 27 குறுள வலைகளும், 300 லீற்றர் மண்ணெண்ணெய், 60 லீற்றர் பெற்றோல், 40 லீற்றர் என்ஜீன் ஒயில், 18 லீற்றர் டியுட்டி ஒயில், 500 தூண்டில் பதித்த வலை ஒன்றும், 02 பெற்றோல் லாம்பும் எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .