Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் ஏதாவதொரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கிண்ணியா கிழக்கு வள அபிவிருத்தி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் அம்மையம் இக்கோரிக்கையை முன்வைத்தது.
இம்மாவட்டத்தில் சுமார் 43 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனினும், மாவட்டச் செயலகத்தின் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த பதவியிலும் முஸ்லிம்கள் இல்லை. இதனால், முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சில விடயங்களில் திருப்தி அற்ற நிலை காணப்படுவதாகவும் அம்மையம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .