Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் 14ஆவது ஒன்றுகூடல் ,வெள்ளிக்கிழமை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் பிரதம அதிதியாகவும். பிரதிக் கல்வி பணிப்பாளர் அ.செல்வநாயகம் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சர்வோதயம் நிலையத்தில் இதனை ஆரம்பித்து வைத்தார்கள்.
வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மாவட்ட சாரணர் ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை 27.09.2015 வரை நடைபெறும் எனவும் இதில் 17 சாரணர் குழுக்களைச் சேர்ந்த 315 சாரணர்களும், 19 சாரணர் தலைவர்களும் பங்கு கொள்வதாக அதன் அமைப்பு ஆணையாளர் எஸ்.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இறுதிநாள் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம விருந்தினராக கலந்துகொள்வார்.
இதில், திறமை காட்டும் சாரணர்களுக்கும், குழுக்ளுக்கும் பரிசுகளையும் வெற்றிக்கிண்ணங்களையும் அவர் வழங்கி வைக்க உள்ளார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026