2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதி, மொறவெவ பகுதியில், இன்று (18) காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ பஸ்ஸும் இராணுவ ட்ரக் ஒன்றும் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வேளை, அவற்றை முந்திச் செல்ல முற்பட்ட மேற்படி இளைஞன், மாடு ஒன்றுடன் மோதியமையாலேயே, விபத்தில் சிக்கினாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர், கந்தளாய், ரஐயல பகுதியைச் சேர்ந்த கே. எம் பி. ஜி. ஈஸான் (22 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை, இராணுவ வீரர்கள், வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர் எனவும், விபத்துத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--