2021 மே 08, சனிக்கிழமை

வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

மூதூர் கிழக்கில் இத்திக்குளம் மற்றும்   சின்னக்குளம் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பிரதான வீதி அண்மையில் பெய்த மழையினால் சேதமடைந்துள்ளமையினால், அவ்வீதியூடான பஸ் சேவை தடைப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இத்திக்குளம், இலக்கந்தை, பாட்டாளிபுரம், நீணாக்கேணி, நல்லூர், சீனன்வெளி ஆகிய பிரதேசங்களிலிருந்து மூதூர் நகருக்குச் செல்லும் பஸ் சேவையே தடைப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பின்தங்கியுள்ளது. இப்பிரதேசங்களில்  வைத்தியசாலைகளோ, வங்கிகளோ, பெரிய கடைகளோ கிடையாது. இங்கிருந்து  நாளொன்றுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒரு தடவை மாத்திரமே  15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூருக்கு சேவையில் ஈடுபடுகிறது.

தற்போது இந்த வீதி  சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து பஸ் சேவை தடைப்பட்டுள்ளதினால், பயணிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.  எனவே, இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீதியின் நிலை குறித்து இப் பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம அலுவலர் கந்தையா யோகேஸ்வரனிடம் கேட்டபோது, இந்த வீதி சேதமடைந்தமை தொடர்பில் மூதூர்ப் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இந்த வீதியைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறினார்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X