2021 மே 12, புதன்கிழமை

விபத்தில் சிறுவன் காயம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயது சிறுவன் படுகாயங்களுனக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் பிரியதர்சன் (வயது 3) என மொறவல பொலிஸார் தெரிவித்தனர்.

தாயுடன் வந்த குறித்த சிறுவன் வீதியில் மறு பக்கத்தில் நின்ற தந்தையிடம் ஓடி வந்த வேளையில், மஹாதிவுள்வல பகுதியிலிருந்து திருமலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளார்.

இதில் படுகாயங்களுக்குள்ளான சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .