Thipaan / 2016 ஜூலை 27 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரிசீடி சந்தியில், மோட்டார் சைக்கிளும் போக்குவரத்துச் சபை பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்து, மூதூர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மூதூர் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூதூர் அம்மன்நகர் பகுதியைச் சேர்ந்த எம்.புவனேஸ்வரி எனும் 35 வயதான பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (27) பகல் 1.20 அளவில் இடம் பெற்றுள்ளது. தற்போது மோட்டார் சைக்கிளும் பஸ் வண்டியும் மூதூர் பொலிஸில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago