2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட முத்துச்சேனைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில்  இரண்டு சிறுவர்களும் ஒரு இளைஞரும் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் இவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், இவர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் சுதன் (வயது14), கவிராசா நிதுசன் (வயது 14) ஆகிய இரண்டு சிறுவர்களும் முத்துச்சேனையைச் சேர்ந்த க.நிது (வயது 19)ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X