Super User / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் 12 தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகள் முதலமைச்சர் விருது வழங்கி
கௌரவிக்கப்படவுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடத்தப்படும் மாகாண தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் அக்டோபர் மாதம் 14ஆம், 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
நிறைவு நாளான அக்டோபர் 16ஆம் திகதி மாலை இவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா நான்கு பேர் வீதம் 12 பேர் முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள படைப்பாளிகளின் பெயர்கள்:
திருகோணமலை மாவட்டம்:-
(1) அபுசாலிஹூ மீராமுகைதீன் (பல்துறை)
(2) தேவசகாயம் நந்தினி சேவியர் (ஆக்க இலக்கியம்)
(3) பிரம்மஸ்ரீ மு. பத்மநாத சர்மா (சிற்பம்)
(4) அ.அரசரத்தினம் (பல்துறை)
மட்டக்களப்பு மாவட்டம்:-
(1) அசோகாதேவி யோகராசா (கவிதை)
(2) அ.அரசரத்தினம் (ஆக்க இலக்கியம்)
(3) உமா தேவி கனகசுந்தரம் (சாஸ்திரீய நடனம்)
(4) எஸ்.பி.பொன்னம்பலம் (ஆக்க இலக்கியம்)
அம்பாறை மாவட்டம்:-
(1) யோ.யோகேந்திரம் (சிறுகதை)
(2) அலியார் பீர்முகம்மது (கவிதை)
(3) எஸ்.அப்துல் ஜலீல் (ஓவியம்)
(4) க.யோன்ராஜன் (ஊடகத்துறை)
16 minute ago
25 minute ago
29 minute ago
33 minute ago
umpaa Wednesday, 28 September 2011 02:32 PM
என்ன தெரிவு இது ! நல்லா தேடிப்பார் ! மற்றவர்கள் ஏன் இப்படி என்று கேட்பதை தவிப்பதற்கு முன்னே உங்கள் தெரிவு அம்பாறை மாவட்டத்தில் 2 முஸ்லிம் 2 தமிழர் , மட்டகளப்பு 2 தமிழர் 2 முஸ்லிம் , திருக்கோணமலை 1 முஸ்லிம் 3 தமிழர். இப்படி இருந்தா எப்படி !
Reply : 0 0
ar.nila Wednesday, 28 September 2011 11:09 PM
nalla videyem
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
29 minute ago
33 minute ago