Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த சாலினி லிங்கேஸ்வரன் 180 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் மாவட்ட நிலையில் முதலாம் இடத்தினைப் பெறுகின்றார்.
இக்கல்லூரியைச் சேரந்த தசாரா ராஜேஸ்வரன் 179 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையினைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 148 மாணவர்களில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் முதல் நிலையை செல்வன் காண்டீபன் மோகனாப்தன் 177 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் மாவட்ட நிலையில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .