2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

யானைகளால் வழிமறித்து தாக்கப்பட்ட லொறி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எவ்.முபாரக்)

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகள் ஒன்றுகூடி வீதியில் சென்று கொண்டிருந்த லொறியொன்றினை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கந்தளாய் சீனி ஆலை 12ஆம் கட்ட வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் பயணித்த லொறிச் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும்  ஓடி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதலினால் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.

கந்தளாயில் தமது தேவைகளை முடித்துக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் சீனி ஆலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--