Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தற்போதைய கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கொல்ல வேண்டும் என பல தடவை நான் எண்ணியிருந்தேன். அதுபோல் அவரும் என்னைக் கொல்ல பல தடவைகள் முயற்சித்திருந்தார். ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவுகின்றது. இன்று இருவரும் ஒன்றாக இணைந்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி சிந்தித்து செயல்படுகின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் பாடசாலைகளுக்கு இடையே நடத்திய 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சுற்றுப் போட்டியின் பரிசளிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
விளையாட்டு வீரர்களால் பேச்சுவார்த்தைகள் செய்ய முடியும். அவர்களால் சமாதான பேச்சுக்களில் ஈடுபட முடியும். நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி விளையாட்டுத்துறை கொண்டு செல்லப்பட வேண்டும். இதுவே ஜனாதிபதியின் விருப்பமாகும் எனவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago