2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

.(எம்.சுக்ரி, எப்.முபாரக், எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள மாகாண தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் 23ஆம்,24ஆம் திகதிகளில் திருகோணமலை உவர் மலையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

23ஆம் திகதி காலை ஆய்வரங்கமும் மாலை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. 24ஆம் திகதி காலை  ஆய்வரங்கமும் மாலை இலக்கிய நூல்களுக்கான விருது வழங்கல், முதலமைச்சர் விருது வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சி என்பனவும் இடம்பெறவுள்ளன.

இறுதி நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதி செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--