2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா முஜாஹிரா வித்தியாலய மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயத்தில் குட்டிக்கராச்சி முஜாஹிரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை நடத்தினார்கள்.

பாடசாலைக்கு வந்த மாணவர்கள், பாடசாலைக்குள் நுழையாமல் வீதியில் நின்றனர். ஆசிரியர்கள் கடமைக்கு வந்த போதும் மாணவர்கள் அவர்களைத் தடுக்கவில்லை.

ஆதிபரை இடமாற்றம் செய்யும் வரை தாங்கள் பாடசாலைக்கு வரப்போவதில்லை என மாணவர்கள் தெரிவித்து போராட்டத்தை நடத்தினார்கள்.

கிண்ணியா வலயக் கல்வி அதிகாரிகள் குழுவொன்று பாடசாலைக்கு சமூகமளித்து மாணவர்களின் பேராட்டத்தை கைவிடுமாறு கேட்ட போதும் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

பின்னர் பெற்றோர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்ததன் பேரில் மாணவர்கள். பாடசாலை வளவுக்குள் நழைந்தனர்.

சம்பந்தப்பட்ட அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலயக் கல்வி அதிகாரிகள் ஒரு வார காலம் அவகாசம் கேட்டிருந்தனர்.

விடயத்தை அறிந்த திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களும் பாடசாலைக்கு வந்து மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், பெற்றோர்களுடனும், கோட்டக்கல்வி அதிகாரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--