2020 நவம்பர் 25, புதன்கிழமை

பாடசாலை செல்லாத பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ, கதிவுல்வௌ, நொச்சிக்குளம், நாமல்வத்த ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத பிள்ளைகளை இனங்கண்டு அவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நடத்த உள்ளதாக சிறுவர் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.எம்.பைசர் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் பாடசாலை செல்லாத மாணவர்களின் விகிதாசாரம் கூடிக்கொண்டு போவதனாலும் அங்கு போதை பாவிக்கக்கூடிய 18 வயதிற்கு குறைந்தவர்கள் அதிகம் காணப்படுவதினாலும் எதிர்கால சிறார்களின் நலன் கருதியும்.இப்பிரதேசத்தில் அதிகம் கவனம் செலுத்த உள்ளதாகவும் தலைவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .